blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 27, 2014

நுகர்விற்குதவாத நூடில்ஸ் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு


நுகர்விற்குதவாத நூடில்ஸ் தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைப்புகொழும்பு, பாலத்துறை, சேதவத்தை பகுதியில் நுகர்விற்குதவாத நூடில்ஸ் தயாரிப்பு நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர்.


அத்துடன் அந்த நிலையத்திலிருந்து நுகர்விற்குதவாத சுமார் 25,000 கிலோகிராம் நூடில்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த நூடில்ஸ் தொகை நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான நூடில்ஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

காலாவதியான மா மற்றும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நூடில்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நூடில்ஸ், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.
நுகர்விற்குதவாத நூடில்ஸ் தயாரித்த சம்பந்தப்பட்ட நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►