blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 27, 2014

கடற்பாதுகாப்பில் புதிய பொறிமுறை

கடல் பாதுகாப்பு மற்றும் கரையோரப்பாதுகாப்பு விடயத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்து புதிய பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளினதும் பாதுகாப்பு நலன்களைக்கருத்தில் கொண்டு இந்தப் பொறிமுறை உருவாக்கப்படவிருக்கிறது.

கடத்தல், ஊடுருவல் மற்றும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் உட்பட இருநாடுகளின் கடல்எல்லைகள் ஆகியவிடயங்கள் இப்புதிய பொறிமுறை உருவாக்கத்தின்போது கவனத்தில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக நேற்று முன்தினம் இருநாடுகளினதும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக டைம்ஸ் ஒவ் இந்தியா என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்திய கடலோர பாதுகாப்பு தலைமை அதிகாரி அனுரக் தப்லியால்; மற்றும் இலங்கையின் கடலோர பாதுகாப்பு படைத் தலைவர் ரவீந்தர விஜயகுணரத்ன ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன் போது இலங்கை இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு தொடர்பிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த இணங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►