blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 27, 2014

விலங்குகளை கொன்று குவிக்கும் சுவிஸ்: ஆராச்சியால் நேரும் அவலம்

சுவிசில் வருடத்திற்கு 11,000க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


சுவிசில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் விலங்குகள் பலியாக்கப்படுகிறது.இதில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் 5,90,000 மிருகங்கள் கொல்லப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகரிக்கும் மிருகங்களின் பலி எண்ணிக்கையால் 2.7 சதவிதத்திலிருந்து தற்போது 30 சதவிகிதமாக பலி கொடுக்கும் எண்ணிக்கை கூடியுள்ளது.

குறிப்பாக கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த ஆய்வுகள் நடைபெறுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமையை சரிசெய்ய, இனி வருங்காலத்தில் செய்யும் ஆராய்ச்சியின் போது விலங்குகள் துன்புறுத்தப்படாது என அறிந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கடந்தாண்டு மட்டும் 300,00 மேற்பட்ட விலங்குகள் ஆராய்ச்சிக்காக மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
கிளப்பில் சகோதரர்களுக்கு கத்திக்குத்து: நபருக்கு 16 ஆண்டு சிறை

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►