blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 10, 2014

உலக இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் இன்று

2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் இன்றாகும்.
இறுதி நாளுக்குரிய நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று காலை 10.30 க்கு  இடம்பெறவுள்ளதாக இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வுக்கான விசேட விருந்தினர்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அரச உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச இளைஞர் மாநாட்டில் 162 நாடுகளை சேர்ந்த  ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்றைய இறுதி நாளுக்குரிய நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் இளைஞர் சம்மேளனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவாயிரத்துக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளும் சர்வதேச இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

சர்வதேச இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம் ருஹூனுபர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், கடந்த ஆம் திகதி  ஆரம்பமானது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►