சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 54 பேரும் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து 20 கடல்மைல்கள் தொலைவில் பயணித்து கொண்டிருந்த படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்டபோது சட்டவிரோதமாக அவுத்திரேலிய சென்றது கண்டுபிடிக்கப்படது அதனை தொடர்ந்து குறித்த 54 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 30 ஆண்களும், 11 பெண்களும், 13 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply