டேவிஸ் கோப்பைக்கான ஆசியா ஓசானியா குரூப் 1 பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் சாகேத் மைனேனி ஆகியோர் கொரியா நாட்டின் ஹியுங் டைக் லீ மற்றும் லிம் யாங் கியூ இணையை தோற்கடித்தனர். போபண்ணா இணை 7-6(4), 5-7, 7-6(2), 6-3 என்ற செட் கணக்கில் 2வது சுற்று போட்டியில் வென்றதை அடுத்து இன்றைய தினத்தில் 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியா நேற்று 1-1 என்ற புள்ளி கணக்கில் இருந்தது. போபண்ணா மற்றும் சாகேத் ஆகியோரது பெரு முயற்சி மற்றும் வெற்றியால் இந்தியா 2க்கு 1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் முன்னேற வேண்டும் என்று நேற்றைய ஒற்றையர் தொடக்க போட்டியில் தோல்விடைந்த சனம் சிங் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். முதல் சுற்றில் போட்டியை நடத்தும் தைபே இணையை 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி கொண்டது.
No comments:
Post a Comment
Leave A Reply