blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: முஷரப்புக்கு பண்ணை வீட்டிலேயெ சிகிச்சை

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்  முஷரப் மீது பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தன்னை வெளிநாட்டில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். ஆனால் அவரது கோரிக்கையை  பாகிஸ்தான் கோர்ட்டு நிராகரித்தது.
அவருக்கு உள் நாட்டிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அவரை ராவல் பிண்டியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் செல்லும் வழியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து தீவிரவாதிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, தற்போது அவர் தங்கியிருக்கும் அவரது பண்ணை வீட்டை ஆஸ்பத்திரி ஆக மாற்ற ராணுவம் முடிவு செய்தது. அதன்படி அவரது பண்ணை வீடு சகல நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி ஆக மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►