ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று சாம்பியனானது. மைதானத்தில் இலங்கை அணி வீரர்கள் வெற்றிக் களிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை அணியின் நட்டசத்திர வீரர் குமார் சங்கக்கார விராட் கோஹ்லிக்கு ஏதோ கூறிக்கொண்டிருப்பதையும் கோஹ்லி சங்கக்காரவை தழுவுவதையும் காணொளியில் காண்ப்பிக்கப்பட்டது.
இக்காட்சியானது கிரிக்கெட் ரசிகர்கள் பலரால் முனுமுனுக்கப்பட்டது. அதாவது இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி உணர்ச்சிவசம் படக்கூடிய வீரர். களத்தில் இருக்கும் போது அடிக்கடி கோபம் படுவதும் ஆவேசமாக செயற்படுவதும் உண்டு. எனவே இதனை கருத்திற்கொண்டு சங்கக்கார விராட்கோலிக்கு ஏதாவது அறிவுரை கூறியிருப்பார் என பரவலாக பேசப்பட்டது.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை நாடு திரும்பியுள்ள இலங்கை அணியின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார தெளிவுப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தேசிய வானொலியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்திருப்பதாவது,
விராட் கோஹ்லி ஒரு சிறந்த வீரர். இந்திய அணியில் கடந்த இரு வடங்களாக பேசப்படும் முக்கிய வீரரும் ஆவார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் நான் அரைச் சதத்தை கடந்தேன். இதன்போது இந்திய அணி தோல்வியடையும் நிலையில் இருந்தது. ஆனால் விராட்கோலியே என்னிடம் ஓடி வந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துச் சென்றார். போட்டி முடிவடைந்ததும் அவர் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்போது நான் அவருக்கு எந்தவொரு அறிவுரையும் கூறவில்லை. உண்மையில் கோஹ்லிக்கு என்னுடைய வாழ்த்துக்களையே தெரிவித்தேன் என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply