ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் 27ஆவது அமர்வில் உரையாற்றிய தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
புதிய ஆணையாளர் நியமனத்தை வரவேற்றுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளது, எனினும் சர்வதேச விசாரணையை கோரும் மார்ச் மாத பிரேரணையை நிராகரிக்கின்றது.
யுத்த கால கரிசனைகள் குறித்த விடயங்களுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூர் பொறிமுறைகளை பயன்படுத்தும் சாட்சி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் அதன் ஆணையை மீறுவதுடன் உள்ளூர் பொறிமுறையை முற்றுமுழுதாக மதிக்காததாக காணப்படுகின்றது. இது நல்லிணக்கத்தை பாதிக்கிறது - என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply