இதையடுத்து அந்த ஜோடிகள் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டன.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரேட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் மற்றும் 2 இளம் பெண்ள் ரயிலின் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஏறினர்.
நள்ளிரவு 12.15 மணிக்கு ரயில் திருச்சியை தாண்டி அரியலூர் ரயில் நிலையம் அருகே செல்கையில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயில் நின்றதும் ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்து விசாரணை நடத்தினர். அதற்கு பயணிகள் கூறுகையில், பி1 பெட்டியில் இருந்த வட மாநில ஜோடிகள் இரண்டு படுக்கையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் எங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த 5 வட மாநிலத்தவர்களும் அரியலூர் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும், கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை செல்வதும் தெரிய வந்தது.
விசாரணைக்கு பிறகு அவர்களை ரயிலில் ஏற்ற பிற பயணிகள் மறுப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு அந்த 5 பேரும் அரியலூரில் இறக்கிவிடப்பட்டு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக கிளம்பிச் சென்றது.
No comments:
Post a Comment
Leave A Reply