அவர்களில் லைபீரியாவில் மட்டும் 1089 பேர் உயிரிழந்ததுள்ளனர். இவை தவிர கினியாவில் 517 பேரும், சியாரா லியோனில் 491 பேரும், நைஜீரியாவில் 8 பேரும் இறந்துள்ளனர்.
இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பலியானவர்களில் 79 பேர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார துறை பணியாளர்கள் ஆவர். எனவே அவர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளனர்.
இந்த நிலையில் எபோலா நோய் லைபீரியாவில்தான் அதிக அளவில் தாக்கம் உள்ளது.
இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் இந்நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அதிகம் பாதித்துள்ள மான்ஸ்ராடோ பகுதியில் சிகிச்சை அளிக்க குறைந்தது 1000 படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது.
ஆனால் 240 படுக்கைகள் மட்டுமே உள்ளன. எனவே நோயாளிகளின் சிகிச்சை மையத்தில் இருந்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தலைநகர் மான்ரோவியாவில் 1000 நோயாளிகளுக்கு மேல் உள்ளனர். ஆனால் இங்கு 240 படுக்கைகளே உள்ளன. இதுபோன்ற நிலை நாடு முழுவதும் உள்ளது.
லைபீரியாவில் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் 3 வாரத்தில் மேலும் பலர் இந்த நோயினால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply