உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபூர் என்ற இடத்தில் நேற்று மாலை விமானப் படை அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டது.
விமானப்படைக்கு சொந்தமான அல்ஹ் துருவ் என்ற அந்த ஹெலிகாப்டர், பரேலியிலிருந்து இருந்து அலகாபாத் நோக்கிச் சென்ற போது சிதாபுர் அருகே அடாரியா என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது.
விபத்து நிகழும் முன்னர் ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் அவசர அழைப்பு விடுத்திருப்பதாகவும், ராடார் கருவியின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அந்தத் தகவலை அறியமுடியாமல் போனதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply