blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, July 26, 2014

அல்ஜீரிய விமானத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சாவு!(படங்கள்,வீடியோ)

அல்ஜீரிய விமானத்தில் பயணித்த   ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சாவு!<i>(படங்கள்,வீடியோ)</i>மாலியில் விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்து விட்டனர்.

அவர்களில் பிரான்ஸில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விமான விபத்தில் எவரும் உயிர் தப்பவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி ஹொலன்டே நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ள தொலைபேசி உரையில் தெரிவித்துள்ளார்.

பலியானவர்களில் 54 பேர் பிரான்ஸ் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா, ஜேர்மனி,ஸ்பெயின் பிரஜைகளும் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

மோசமான காலநிலை காரணமாக விமானத்தின் பாதையை மாற்றியதே விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மாலி நாட்டின் ஆட்களற்ற பற்றைக்காடுகள் நிறைந்த பகுதியில் விமானத்தின் சிதைவுகள் காணப்படும் படங்களை பிரான்ஸ் இராணுவம் வெளியிட்டுள்ளது.

விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணமுடியாதபடி எரிந்து காணப்படுகின்றன. பலியானவர்களின் உடல்கள் உட்பட எதனையும் மீட்பது கடினமாக உள்ளது, சிதைவடைந்த விமானத்தின் உடற்பாகங்கள் மாத்திரமே காணப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் தரையில் வீழ்ந்து தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இதன் காரணமாக 500 மீற்றர் பரப்பளவுக்கு விமானத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஜீரிய விமானத்தில் பயணித்த   ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சாவு!<i>(படங்கள்,வீடியோ)</i>
இதேவேளை அந்த விபத்தில் பலர் குடும்பங்களாக மாண்டுபோயுள்ளனர். பிரான்ஸை சேர்ந்த 10 பேர் கொண்ட குடும்பமொன்று விபத்தில் பலியாகியிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் பலியாகியுள்ளனர். பிரான்ஸின் உள்துறை அமைச்சர், காலநிலையே இந்த விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகப் படையினரையும் நிபுணர் குழுக்களையும் தாம் அனுப்பியுள்ளோம் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
 
மாலியில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த வருடம் பிரான்ஸ் அரசு இராணுவ நடவடிக்கைக்காக தமது படையினரை அனுப்பியிருந்தது. இதனால் அப்பகுதியில் பிரான்ஸ் படையினரே இன்னமும் நிலை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►