எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 4, 2014
பாகிஸ்தானில் வினோதம்: 9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு
லாகூர்: பாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் அகமது. இவரது 9 மாத குழந்தை மூசா. கடந்த சில தினங்களுக்கு முன்பு லாகூரில் உள்ள ஒரு பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது அகமதுவுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அகமது போலீசாரை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக அகமது மற்றும் அவரது 9 மாத குழந்தை மூசா மீது அப்பகுதி சப் இன்ஸ்பெக்டர் காசிப் அகமது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கில் அகமதுவையும், மூசாவையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 12 வரை குழந்தை மூசாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் குழந்தையிடம் ‘வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி
’ போலீசாருக்கு கிண்டலாக உத்தரவிட்டார். இதுகுறித்து குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் இர்பான் தரர், நீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது, அடுத்த முறை விசாரணையின் போது குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று தெரிவித்தார். இதுகுறித்து எஸ்பி ரானா ஜப்பார் கூறுகையில், இந்த வழக்கில் ஏதோ தவறு நடந்துள்ளது.
போலீசார் தவறாக புரிந்து கொண்டு 9 மாத குழந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே குழந்தை மீது வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் காசிப் அகமது சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.இதுகுறித்து குழந்தை மூசாவின் தந்தை அகமது கூறுகையில், மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக 9 மாத குழந்தை உள்பட 27 பேர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....

No comments:
Post a Comment
Leave A Reply