பணம் இருந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என பலர் எண்ணுவார்கள். ஆனால், தனது சொந்த வாழ்க்கை ஒரு பேரழிவு என்கிறார் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பெரிய கோடீஸ்வரரான ஜேம்ஸ் பெக்கர்.
46 ஆவது வயதான ஜேம்ஸ் பெக்கரின் சொத்து மதிப்பு 650 கோடி டொலர் (சுமார்84,000 கோடி ரூபா) என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது. இலங்கையிலும் பெரும் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளவர் ஜேம்ஸ் பெக்கர்.
வர்ண ஆடைகளுடன் மின்னொளியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கு வழிவகுத்தவர்.
2005 ஆம் ஆண்டு கெரி பெக்கர் மறைந்தபின் அவரின் மகன் ஜேம்ஸ் பெக்கர் தமது குடும்பத்தினர் வர்த்தக நடவடிக்கைகளை உலகெங்கும் விஸ்தரித்து வருகிறார்.
ஆனால், இரு தடவை திருமணமாகி விவகாரத்தான ஜேம்ஸ் பெக்கரின் சொந்த வாழ்க்கை திருப்தி திருப்திகரமானதாக அமையவில்லை.
போர்ப்ஸ் சஞ்சிகைக்கு அளித்த செவ்வியொன்றில், 'எனது வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன். ஏற்றங்களும் தாழ்வுகளும் இருந்தன. தற்போது வர்த்தகம் சிறப்பாக உள்ளது. ஆனால், எனது சொந்த வாழ்க்கை ஒரு பேரழிவு' என ஜேம்ஸ் பெக்கர் கூறியுள்ளார்.
2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது ஜேம்ஸ் பெக்கரும் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் சுமார் 260 கோடி டொலர் (சுமார் 2600 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இழப்பை
தான் எதிர்கொண்டதை பார்ப்பதற்கு தனது இல்லாதிருந்தமை திருப்தியளிக்கிறது என ஜேம்ஸ் பெக்கர் கூறியுள்ளார்.
தற்போது ஜேம்ஸ் பெக்கரின் வெற்றிகளைப் பார்ப்பதற்கு தனது தந்தை கெரி பெக்கர் அருகில் இருந்தால் ஜேம்ஸ் பெக்கர் மகிழ்ச்சியடைவாரா என அவரிடம் வினவப்பட்டது. 'அப்படியிருந்தால் அவர் 2008 ஆம் ஆண்டிலும் என்னை பார்த்திருப்பாரே' என வேடிக்கையாக பதிலளித்துள்ளார் கெரி பெக்கர்.
ஆவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெஷன் வடிவமைப்பாளரும் மொடல் அழகியுமான ஜோதி மியரெஸை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்தவர் ஜேம்ஸ் பெக்கர் 2002 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்தனர்.
பின்னர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாடகியும் மொடல் அழகியுமான எரிக்கா பெக்ஸ்டரை 4 வருடங்களாக காதலித்த ஜேம்ஸ் பெக்கர் 2007 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்தார். புpரான்ஸில் சுமார் 1.5 கோடி அவுஸ்திரேலிய டொலர் செலவில் ஆடம்பரமாக இத்திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 பிள்ளைகள் பிறந்தனர். ஆனால் கடந்த வருட இறுதியில் எரிக்காவிடமிருந்து ஜேம்ஸ் பெக்கர் பிரிந்தார்.
தனது பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன் எனக்கூறும் ஜேம்ஸ் பெக்கர் தற்போது உலகப் புகழ்பெற்ற அவுஸ்திரேலிய மொடல் அழகியான மிரண்டா கேரை ஜேம்ஸ் பெக்கர் காதலிக்கிறார் என பல ஊடகங்களில் செய்திகள் தகவல்கள் வெளியாகியுள்ளன.
30 வயதான மிரண்டா கேர், 2010 ஆம் ஆண்டில் ஹொலிவூட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஒர்லாண்டோ புளுமை திருமணம் செய்திருந்தவர். தூனும் ஒர்லண்டோவும் பல மாதங்களுக்கு முன்னர் பிரிந்துவிட்டாகவும் விவாகரத்து செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த ஒக்டோபர் மாதம் மிரண்டா கேர் அறிவித்தார்.
ஆனால், ஜேம்ஸ் பெக்கருக்கும் மிராண்டா கேருக்கும் இடையிலான காதல் குறித்து இவர்கள் இருவரும் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை.
நேர்காணல்களின்போது ஒர்லண்டோ புளும் குறித்தோ ஜேம்ஸ் பெக்கர் குறித்தோ தான் பேசப்போவதில்லை என மிரண்டா கேர் கண்டிப்பான நிபந்தனை விதிக்கிறார் எனக் கூறப்படுகிறது.



No comments:
Post a Comment
Leave A Reply