blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, October 13, 2016

பட்டதாரிகளின் கவனத்திற்கு; இனி கவலை இல்லை!

இலங்கையில் அதிகளவு பேசப்படம் விடயம் பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினை தொடர்பானதாகும்.
இந்நிலையில்,  பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து வெளியேறும் அனைத்து பட்டதாரிகளுக்கும் கட்டாயம் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பட்டக் கல்வியை பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்கள் தொழில் இன்றி வீட்டில் இருக்கும் காலம் ஆறு மாதங்களுக்கு வரையறுக்கப்பட வேண்டும்.

இதன்படி, அரசாங்கத்தில் காணப்படும் சகல வெற்றிடங்களுக்கும் பட்டதாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதற்காக விசேட திட்டமொன்று எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. பட்டதாரிகள் ஏதேனும் ஓர் தொழில் துறையில் பணியாளர்களாக உள்ளீர்க்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆகவே பட்டதாரிகள் இனி கவலையில் இருந்து விடப்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►