அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழிலை எதிர்பார்த்திருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான தொழில் பேட்டை எதிர்வரும் 18, 19 ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் எம்.ஐ. அமீர் தெரிவித்தார்.தொழில் அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம், சர்வதேச தொழில் அமைப்பு மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருக்கும் இத்தொழில் பேட்டையில் தொழிலை எதிர்பார்த்திருக்கும் பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் மற்றும் தொழிலை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பேட்டையானது அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான பெரும் நன்மையளிக்கும் ஒன்றாகும்.
இத்தொழில் பேட்டைக்காக உள்நாட்டு ரீதியாக கூடுதலான வரவேற்பைப் பெற்றுள்ள தொழில் வழங்கும் நிறுவனம் மற்றும் அமைப்புக்களில் அதிகமானவை பங்களிப்பு வழங்கவிருப்பதுடன் அந்நிறுவனங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்பவதற்காக நேர்முகப்பரீட்சை நடாத்துதல், தொழிலை எதிர்பார்த்திருப்போரை அவ்வெற்றிடங்களுக்காக இணைத்துக் கொள்ளுதல், தொழில் வழிகாட்டல் சேவைகளை வழங்குதல், தொழில் பயிற்ச்சி நிறுவனங்களில் பயிற்சிக் கற்கை நெறிகள் தொடர்பாக அறிவூட்டல் மற்றும் பயிற்ச்சி நெறிகளுக்காக ஈடுபடுத்துதல் உள்ளடங்கிய பல சேவைகள் இத்தொழில் பேட்டையில் வழங்கப்படவுள்ளன.
கல்வித் தகைமைகள், ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய சுயவிபரக் கோவை, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் தகைமையுடைய அனைவரும் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.(எஸ்.அஷ்ரப்கான்)
No comments:
Post a Comment
Leave A Reply