blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, October 26, 2015

இந்திய எல்லைச் சாவடிகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்

Jammu-Kashmir atteckஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்ட எல்லையில் 12 இந்திய எல்லைச் சாவடிகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் இராணுவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் நடத்தியது. இதில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாம்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் இராணுவம் நேற்று சிறியரக பீரங்கி குண்டுகளை வீசியது. நேற்றைய முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பமாகிய தாக்குதல் நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது.

இதில் எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய எல்லை பாதுகாப்புப் படை தரப்பில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் நேற்றைய முன்தினம் இதே சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதோடு, தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் தாக்குதல் நடத்தியதால் குறித்த எல்லை பகுதியில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►