blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, October 27, 2015

கல்முனை பிரதேச செயலகத்தில் சர்வதேச உவளத்துணை வாரம்


சர்வதேச உவளத்துணை வாரத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் உளவளத்துணையின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
அண்மையில் பிரதேச செயலாளர் மொஹமட் கனி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உளவளத்துணை ஏன் அவசியம்? அதன் முக்கியத்துவம் என்ன? உள நெருக்கீடு என்றால் என்ன அதனை எவ்வாறு கையாள்வது? உளவளத்துணை ஏன் தொழில்வாண்மை துறையாக காணப்படுகிறது? மனிதனை கன்னியப்படுத்தல் உளவளத்துணையில் எவ்வாறு நோக்கப்படுகிறது? என்ற தலைப்புக்களில் கவுன்சலர் றினோஸ் ஹனீபா, உளமருத்துவ நிபுணர்களான வைத்தியர் ஜூராஜ் மற்றும் வைத்தியர் சராப்டீன் உரையாற்றினார்கள். கவுன்சலர் ஏ.ஆர் தஹ்லான் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. தகவல்: ஜே.எம் றிமாஸ்





No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►