பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெருக்கடிகளை எதிர்நோக்கலாம் என இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் இன்று பிரிதானியா பாராளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளது.
“சிறிலங்காவின் கொலைக்களங்கள்“ என்ற பெயரில் வெளியான ஆவணப்படத்தை சிங்கள மொழியில் மொழியாக்கம் செய்து இன்று வெளியிடப்படவுள்ளது.
சிறிலங்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சென்ற மைத்திரிபாலவுக்கு, போர்க்குற்ற ஆவணப்படும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியா சென்றுள்ள மைத்திரி, இன்று பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரித்தானிய மகாராணி ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன், இராப்பாசன விருந்திலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் போர்க்குற்ற ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் காட்சி அறை ஒன்றில் திரையிடப்படவுள்ளது.
தேசிய தலைவர் வே.பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply