blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, March 13, 2015

இலங்கையுடனான பொருளாதார உறவு மேலும் நெருக்கமாகும்: மோடி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான பொருளாதார உறவுகள் மேலும் நெருக்கமடையும் என்று உறுதியளித்துள்ளார்.

இலங்கை விஜயத்தின் முதல்நாளான இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மோடி நடத்தினார்.

இந்த சந்திப்பின் பின்னர் பேசிய நரேந்திர மோடி, இலங்கையின் வணிக ரீதியான கவலைகளைத் தீர்ப்பதாகவும் அந்நாட்டின் ரயில்வே கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய செயற்திட்டங்களில் உதவிகளை வழங்குவதாகவும் கூறினார்.


சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்ற முதலாவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக, அந்நாட்டுடனான உறவை மேலும் வளர்க்க மோடி விரும்புவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►