blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, March 29, 2015

ஸ்ருதிஹாசன் படங்களில் நடிக்க தடை!! ஏன்மா!!!!

புதிய படங்களில் நடிக்க, ஸ்ருதிஹாசனுக்கு ஐதராபாத் கோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது.

கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தை பிவிபி நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக, படத்தில் இருந்து அவர் திடீர் என விலகினார்.

இதை எதிர்த்து பிவிபி நிறுவனம் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது.

அதில், ‘ஸ்ருதியின் கால்ஷீட் படி, மற்ற நடிகர்களிடமும் கால்ஷீட் வாங்கியிருந்தோம். பாதி படம் முடிவடைந்த நிலையில் படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதிஹாசன் மெயில் அனுப்பி இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

ஸ்ருதியால் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது.

பல கோடி ரூபாய் பண இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குப் பதிவு செய்யப்பட வேன்டும். அடுத்த தீர்ப்பு வரும்வரை எந்த நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒப்புக்கொண்ட படத்தை முடிக்கும் முன் வேறு பட நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்ய இடைக்கால தடை விதித்தது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►