blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, August 28, 2014

ஜனாதிபதி வாக்குறுதி அளித்தபடி செயற்படவில்லை; குற்றம் சுமத்தும் சம்பந்தன்

ஜனாதிபதி வாக்குறுதி அளித்தபடி செயற்படவில்லை; குற்றம் சுமத்தும் சம்பந்தன்ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்தாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதற்கு இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தமை குறித்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயமானது திருப்தி அளித்துள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் வாக்குறுதி அளித்தபடி செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இரா.சம்பந்தன் வலியுறுத்தி கூறியுள்ளார்.
மேலும், பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இணைய மறுப்பது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கூட்டமைப்பும், எதிர்கட்சிகளும் இணைந்து விவாதித்து தீர்வை முன்வைத்தால், அதனை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து ஏற்க முன்வரும் போது தெரிவுக்குழுவில் இணையத் தயாராக உள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மலையகத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் இந்த விடயங்கள் குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு மீனவர்களும் இணைந்து பேசி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 23ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடிய விடயங்கள் குறித்து, கூட்டமைப்பின் தலைவர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழக பாதீய ஜனதாக் கட்சியின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►