ஒரு வருடத்தில் 7455 குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன - “முஹம்மத்” என்ற பெயர் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் வேல்சிலும் பிறந்த குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட, இங்கிலாந்தின் மிகப் பிரபலாமான பெயராகும் என இங்கிலாந்தின் தேசிய புள்ளி விவரவியல் செயலகத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி Breitbart London ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னைய காலங்களில், இங்கிலாந்தின் மிகப் பிரபலமான பெயராக விளங்கிய ‘ஒலிவர்’ (Oliver) 6949 குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டு, இரண்டாமிடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது.
‘முஹம்மத்’ என்ற பெயர் வித்தியாசமான எழுத்தமைவுகளில்
சூட்டப்பட்டுள்ளதை செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
“Muhammad” – 3,499,
“Mohammed”– 2,887,
“Muhammad” – 1059
என இப் பெயர் பதியப்பட்டுள்ளன.
‘Muhammed’ என்ற பெயர் 2008ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகப் பிரபலமான பெயர்களில் மூன்றாமிடத்தில் இருந்துள்ளது.
2009 ஆம் ஆண்டளவில் பிரபலமடைந்து, 2013 இல் இங்கிலாந்தின் சம்பிரதாய பெயரைப் பின் தள்ளிவிட்டது.
பிரித்தானியாவில் சுமார் 2.7 மில்லியன் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply