சிரியாவில் செய்திகளை சேகரித்து வந்து அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே (James Foley) கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிராவதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இவரை கொன்ற அந்த தீவிரவாதி சரளமாக ஆங்கிலத்தில் பேசி தங்கள் அமைப்பின் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்தான்.
அவனது ஆங்கிலப்பேச்சு பாணி பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் பேசுவதைப் போல் இருந்துள்ளது.
எனவே கருப்பு நிற துணிக்கு உள்ளே முகத்தை மறைத்திருந்த அந்த தீவிரவாதியின் முகத்தின் அளவையும், வடிவத்தையும் வைத்து கணணியின் உதவியுடன் அமெரிக்க தடயவியல் வல்லுனர்கள் முகத்தை வடிவமைத்துள்ளனர்.
மீசையுடன் ஒன்று, மீசையில்லாமல் ஒன்று என இரண்டு புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அராபியர்களின் சாயலில் சதைப்பற்றில்லாத, சப்பை வடிவிலான அந்த முகம் காணப்படுகின்றது. மேலும் இவனது பெயர் ஜான் என கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply