blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, March 28, 2015

இதயத்தின் செயல்பாட்டை கண்காணிக்க புதிய ஆப்ஸ்! டாக்டர்கள் குழு,வெளியிட்டுள்ளது!

இதய பாதிப்புகளை கண்டறியவும், மாரடைப்பு வராமல் நம்மை நாமே காத்துக் கொள்ளவும் வழிவகுக்கும் புதிய மொபைல் அப்ளிகேஷனை தானே டாக்டர்கள் குழு வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பல்வேறு இதய சிகிச்சை கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் கொண்ட அமைப்பான மாதவ்பாக்கின் 50ம் ஆண்டு விழாவையொட்டி, புதிய மொபைல் அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சை டாக்டர்களும், ஐடி பிரிவினரும் இணைந்து வடிவமைத்துள்ள இந்த அப்ளிகேஷனுக்கு ‘ஹார்ட் ஹெல்த் மீட்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நமது இதயத்தின் செயல்பாடு எப்படியுள்ளது, இதயம் எந்த நிலையில் இயங்குகிறது, பாதிப்புகள் உள்ளதா, மாரடைப்பு வர எவ்வளவு சதவீதம் சாத்தியக்கூறுகள் உள்ளன, அப்படியே வந்தால் எத்தனை ஆண்டுகளில் மாரடைப்பு வரும், அதிலிருந்து நாம் மீள என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இதய சம்மந்தமான பல்வேறு ஆலோசனைகள் இந்த அப்ளிகேஷன் நமக்கு வழங்குகிறது.

இது குறித்து வைத்ய சானே அறக்கட்டளையின் நிறுவனர் ரோகித் சானே கூறுகையில், ‘வயதாவதாலும், நீரிழிவு, எடை குறைதல், சிகரெட் பழக்கம், அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற பாதிப்புகளாலும் நமது ரத்த நாளங்களும், இதயமும் பாதிப்படைந்து மாரடைப்பு ஏற்படுகிறது.

இதை தடுக்க, ஹார்ட் ஹெல்த் மீட்டர் அப்ளிகேஷன் மூலம் நாமே நமது இதய பாதிப்புகளை கண்டறிந்து உடனடி சிகிச்சை மேற்கொண்டு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்‘ என்றார்.

தற்போது இந்த அப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கான கூகுள் பிளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். விரைவில், விண்டோஸ் மொபைல்களுக்கான அப்ளிகேஷனையும் உருவாக்க உள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►