blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, March 29, 2015

5 வது தடவையாகவும் உலக கிண்ணத்தினை அவுஸ்ரேலியா தட்டிச்சென்றது.

இம்முறை இடம்பெற்ற 11 ஆவது உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப்போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் கலக்கிய அவுஸ்திரேலியா 5 ஆம் முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

184 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அபாரமாக வெற்றி பெற்றது.

அணித்தலைவர் மைக்கல் கிளார்க் அபாரமாக துடுப்பெடுத்தாடி 74ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வோர்னர் 45 ஓட்டங்களையும் ஸ்மித் 56ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூசிலாந்து சார்பாக போல்ட் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

முன்னதாக நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் எலியட் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோன்சன் மற்றும் போக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர்.

முதல் முறையாக உலகக்கிண்ணம் என்ற பிரம்மாண்டத்தினை அடையும் முயற்சியில் நம்பிக்கையோடு களமிறங்கிய நியூசிலாந்தின் கனவு பொய்யாகிப் போனது.

உலக கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதை ஸ்டார்க் வென்றார்.
உலகக் கோப்பையை பில் ஹியூசுக்கு சமர்ப்பணம் செய்த ஆஸ்திரேலியா !
 ஆட்ட நாயகன் விருதை பால்க்னர் வென்றார்.
5 வது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►