எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடித்து சுதந்திரக்கட்சி சார்பான புதிய அரசாங்கத்தை உருவாக்குவேம் என்று, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சபதம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க எதிர்வரும் 14 ஆம் திகதி சுதந்திரக்கட்சி செயற்குழு கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கத்தக்கதாக, பிரதமரை சுதந்திரக்கட்சி சார்ந்து தேர்தலின் பின் நாம் நியமிப்போம் என்றார்.
சுதந்திரக்கட்சி மீது திணிக்கப்படும் சதி முயற்சிகள், சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தோற்கடித்து எதிர்காலத்தில் திறமையாக கட்சியை கொண்டுசெல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐ.தே.க. உறுப்பினரான ஹரின் பெர்னாண்டோ, ஊவா மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டபோது அதற்கு ஆதரவு வழங்கிய சுதந்திரக்கட்சி சார்ந்தவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
சரியான சட்டச் செயல்முறை மூலம் கட்சிக்குள் இருப்பவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் கட்சியைவிட்டு நீக்கப்படுவர்.
கடந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும் நான் கட்சியைவிட்டு ஓடிவிடவில்லை. எந்தப் பதவி என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதே சிறந்தது.- என்றும் அவர் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, February 9, 2015
நாடாளுமன்ற தேர்தலில் ரணிலை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம்! எதிர்கட்சி தலைவர் நிமலின் புதிய சரஸ்வதி சபதம்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
No comments:
Post a Comment
Leave A Reply