தமிழர்கள் விடயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கையின் புதிய அரசாங்கம் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
“இலங்கை, நீண்ட ஒரு அதீத அதிகார ஆட்சிக்குள் இருந்து மீண்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை மக்கள் சந்தோசமடைந்துள்ளனர். இலங்கையை பற்றி சிந்திப்போர் இதனை சிறந்த வாய்ப்பு" என்று கூறுகின்றனர்.
இலங்கையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை வலுப்படுத்தப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சித்திரவதை மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும். எனினும் இவற்றில் இலங்கை தோல்வி கண்டால், மோசமான நிலை உருவாகும். இந்தநிலையில் தமிழர்கள் விடயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பதில் இலங்கையின் புதிய அரசாங்கம் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.
தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கும் சிங்களவர்களை போன்று சம உரிமை வழங்கப்பட வேண்டும். அவ்வாறான ஏற்பாடுகளுக்கு நோர்வே ஆதரவளிக்கும்” என்றும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, February 5, 2015
தமிழ், முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களை போன்று சம உரிமை வழங்கப்பட வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply