blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, February 5, 2015

67ஆவது சுதந்திர தின நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட தவறு என்ன!!

நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திபால சிறிசேனவின் தலைமையில் நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்றது.

"செழுமையான தாய்நாடு! வளமான எதிர்காலம்" எனும்தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த வைபவத்துக்கான நிகழ்ச்சி நிரலை உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு தயாரித்திருந்தது.

அத்துடன் கையேட்டையும் அச்சடித்திருந்தது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அச்சடிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அழைக்கப்பட்ட அதிதிகளில் காலை 8.39க்கு பிரதம நீதியரசரின் வருகை இடம்பெற்றது.

இதில் 44ஆவது பிரதம நீதியரசரான கே.ஸ்ரீபவன் வருகைதந்தார். எனினும், நிகழ்ச்சி நிரலில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசும் அவரது பாரியாரும் வருகை தருவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை  மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, கடந்த புதன்கிழமை (27) பிரதம நீதியரசராக பதவியேற்றுக்கொண்ட நிலையில், பிரதம நீதியரசராக இருந்த மொஹான் பீரிஸின் பதவி அன்றிலிருந்து வலுவற்றதாகியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►