அக்காவின் கணவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தரித்துள்ள 11 வயது சிறுமி குழந்தையைப் பிரசவிப்பதற்கு ஹட்டன் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
11 வயது சிறுமியின் கருவைக் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த குழந்தையை பிரசவிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி கே.எம்.மகசேன ஹட்டன் நீதிமன்ற நீதவானிடம் அனுமதி கோரியிருந்தார்.
இதிலுள்ள உளவியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கினார். சிறுமியின் அக்காவின் கணவரினால் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதை பொலிஸார் விசாரணை மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுதவிர, குறித்த சிறுமி அப்பிரதேசத்திலுள்ள மற்றுமொரு இளைஞனினாலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் குறித்த சிறுமி டிக்கோயா வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சிறுமி குழந்தையைப் பிரசவிக்கும் அளவிற்கு உடல்பலம் கொண்டவர் இல்லையென அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் நிலை மோசமாக இருந்தபோதிலும் கருவைக் கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் குழந்தையைப் பிரசவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, February 5, 2015
11 வயது சிறுமி அக்காவின் கணவரினால் கர்ப்பம்!!! குழந்தைப் பிரசவிப்பதற்கு ஹட்டன் நீதிமன்றம் அனுமதி!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply