கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் பிளவு ஏற்பட்டது.
முதலமைச்சர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மு.கா. தலைமை எடுத்தபோதும், முதல்வர் விவகாரம் தொடர்பான தலைமையின் முடிவு மு.கா. உறுப்பினர்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு வழங்க கட்சித் தலைவர் ஹக்கீம் தீர்மானித்ததையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு முதலமைச்சுப் பதவியை வழங்க கட்சியின் தலைமை தீர்மானித்ததையடுத்து, மு.காவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுக்களின் தலைவருமான எம்.ஏ.ஜெமீல் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
தனது இராஜிநாமாக் கடிதத்தை மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்க முயன்றபோதிலும் அவர் அதை நிராகரித்ததையடுத்து, இராஜாங்க அமைச்சரும் கட்சியின செயலாளருமான ரி.எம். ஹசன் அலியிடம் கையளித்துள்ளார்.
இதையடுத்து, ஜெமீல் உள்ளிட்ட அதிருப்தித் தரப்பினரை சமரசப்படுத்தும் முயற்சியில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
"அம்பாறை மாவட்டத்தில் 75 சதவீத மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களித்து வருகின்றனர். இருப்பினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது.
முதலமைச்சுப் பதவியை அம்பாறை மாவட்டத்துக்குக் கொடுத்தால் தனது தலைமைப் பதவி பறிபோகும் நிலைமை ஏற்படும் என்பதனாலே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அதை மு.கா. தலைவர் ஹக்கீம் வழங்கினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கடந்த காலங்களில் தலைமைக்கு எதிராக செயற்பட்டு வந்தார். அதனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் முடிவை எதிர்த்து வாக்களிக்க அவர் செல்லவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூதை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதற்காகவே முதலமைச்சர் பதவியை ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது'' - என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, February 6, 2015
முஸ்லிம் காங்கிரஸிற்குள் பிளவு! இராஜிநாமா செய்தார் ஜெமீல்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply