அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட ரொஸல்ல கிராமத்தில் ஒரு வீட்டு முற்றத்தில் மண் தரையில் அமர்ந்து அறநெறி பாடம் கற்று வரும் மாணவர்கள் தங்களுக்கு 6 பேர்ச் கொண்ட காணி மட்டும் வேண்டும் என பயிலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களின் கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நிலையான ஒரு கட்டிடமோ இடமோ இல்லை என இம்மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த 12 ஆண்டுகாக கருமாரி அறநெறி பாடசாலை என்ற பெயரை கொண்டு இப்பாடசாலை நடைபெற்று வருகின்றது.
குறித்த அறநெறி பாடசாலை 2006ஆம் ஆண்டு 3ஆம் மாதம் 15ஆம் திகதி மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சினால் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இந்த பாடசாலையில் 100ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
எனினும் இந்த பாடசாலையின் நிலைமை குறித்து பல அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களென பலரிடமும் தெரிவித்தும் அவர்கள் பார்வையிட்டு செல்வதாகவும் மிக விரைவில் கட்டிடம் ஒன்று கட்டி தருவதாக வாக்குறுதி அளிப்பதாகவும் எனினும் அதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என இம்மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இப்பாடசாலை நடாத்துவதற்கு இடத்தை மட்டும் கொடுத்தால் தற்காலிக கூடாரங்களை வைத்து இப்பாடசலையை நடாத்தி செல்ல முடியும் என இப்பாடசாலையை நடத்தும் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
வெயிலிலும் மழையிலும் மண் தரையில் அமர்ந்து கல்வி பயிலும் இம்மாணவர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் உட்பட பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, February 23, 2015
அரசியல்வாதிகளை நம்பி பயன் இல்லை: மண் தரையில் கல்வி!!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply