பலாங்கொட குருகல பகுதியின் 52 ஏக்கர் காணியில் வசிக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை அகற்றாது போனால், தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக சிங்ஹல ராவய அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
சிங்ஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களை முன்னைய அரசாங்கம் அகற்றியிருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் மீண்டும் அவர்களை குடியேற அனுமதித்திருக்கிறது.
இந்தநிலையில் இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லையேல் பிரச்சினையை தமது கைக்குள் கொண்டு வரப்போவதாக தேரர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்துக்குள் இருக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குருகல பகுதியில் குடியேறியுள்ள முஸ்லிம்களே சட்டவிரோத குடியேறிகள் என்று சிங்ஹல ராவய குறிப்பிட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 15, 2015
சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகளை வெளியேற்றாவிட்டால் தற்கொலை செய்வோம்! சிங்ஹல ராவய எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
முல்லைத்தீவு சாளை கடற்பரப்பில் விமான படைக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் விமானம் ஒன்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
“அமெரிக்க இலக்குகளின் மீது தாக்குதல் நடத்தியது நிஜமாகவே பின்லேடன்தானா?” இப்படியொரு சந்தேகத்தை யார் கிளப்பியிருந்தால், அது அதிர வைக்கும்? ...
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...
No comments:
Post a Comment
Leave A Reply