சவுதி பயணத்தின் போது ஒபாமாவின் மனைவி மிஷேல் முக்காடு போடாததற்கு வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
சமீபத்தில் சவூதிக்கு ஒபாமாவுடன் பயணம் மேற்கொண்ட அவரது மனைவி மிஷேலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
அவர் முக்காடு அணியாததால் சவுதியில் சில அதிகாரிகள் அவருடன் கைகுலுக்க மறுத்து, ஒபாமாவை மட்டும் கைக்குலுக்கி சென்றனர்.இச்செயல் மிஷேலை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. மேலும் மிஷேலின் உருவத்தை சவுதி தொலைக்காட்சியில் மங்கலாக்கி ஒளிப்பரப்பட்டது.
ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பில்லை என அந்நாட்டு தொலைக்காட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மிஷேல் எதற்காக முக்காடு போடவில்லை என்பது பற்றி வெள்ளை மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் மூத்த செய்தித் தொடர்பாளர் எரிக் சல்ட்ஸ் கூறுகையில், இதற்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளின் மனைவிகளான யர் லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சவுதி சென்றபோது முக்காடு அணியவில்லை.
அதையே மிஷேலும் பின்பற்றியுள்ளார். எனவே இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என கூறியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 1, 2015
ஒபாமாவின் மனைவி ஏன் முக்காடு போடவில்லை? விளக்கமளிக்கிறது வெள்ளை மாளிகை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply