இலங்கையில் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதி மேன்மை தாங்கிய, மேதகு, அதி வணக்கத்திற்குரிய, கௌரவ ஜனாதிபதி என்ற மிகைப்படுத்திய பதங்களால் தன்னை அழைக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
இவ்வாறான விசேட சொற்பதங்களைக் கொண்டு தன்னை அழைக்கக் கூடாது என்பது பற்றி அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது துணைவியை ஜனாதிபதியின் பாரியார் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கோரியுள்ளார்.
தேசிய தொலைக்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்ற முதலாவது நேர் காணல் நிகழ்ச்சியின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் முக்கியமான ஒத்துழைப்பை வழங்கினர்.நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கினர்.
மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.
இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது இலகுவான காரியமல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அதீதிதமான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு காணப்பட்டாலும், நாடாளுமன்றின் ஒத்துழைப்பின்றி 100 நாள் திட்டத்தை அமுல்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 1, 2015
நல்லாட்சியை நிலைனாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி மைத்திரி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply