அமைச்சரும், தேசிய
காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது
மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வைத்து
ஒருசில குள்ள
நரிகளின் தந்திர மூளையுடன் 8ம் திகதிய ஜனாதிபதி தேர்தலில் ஆளும் அரசுக்கு
வாக்குவங்கியை கூட்ட எடுத்த முயட்சி புஸ்வானமாகிப்போனது.
தமிழ்,முஸ்லிம்
மக்களின் ஒற்றுமைக்கு சான்றாக கடந்த காலங்களில் இருந்து வந்த கல்முனை
மாநகர சபையை 4 ஆக உடைத்து, சாய்ந்தமருது மக்களின் பல வருட ஆசையாகவும் ,
தேவையாகவும் இருந்து வரும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை ஒன்றை
பெற்று கொடுப்பதன் மூலம் தமது நன்றிக்கடன்களை வெற்றிலைக்கு வாக்களிப்பதன்
மூலம் சாய்ந்தமருது மக்கள் தீர்த்து கொள்வார்கள் எனும் அமைச்சரின் பகல்
கனவு பலிக்காமல் சென்றுள்ளது.
முஸ்லிம்
காங்க்ரெஸ் கட்சியின் அசைக்க முடியாத கோட்டைகளில் ஒன்றான கல்முனையை
ஆட்டம் காணச் செய்ய அமைச்சரின் சதி இறைவனின் உதவியுடன்
முறியடிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்களுக்கும், மஹிந்த அரசுக்கு
ஆதரவு சேகரிக்கவும் பலவழிகளிலும் போராடிக்கொண்டிருக்கும் அமைச்சரும்,தேசிய
காங்க்ரெஸ் கட்சியும் ஒற்றுமையை சிதறடித்து மக்களின் தேவைகளை நிறைவு செய்து
தரும் மாயைக்குள் அரசுக்கு வாக்கு சேகரிக்கும் இலக்கு புஸ்வானம்
ஆகிப்போனது. மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்டதை எதிர்த்து உரிமைகளுக்காக
ஒன்றிணைந்திருக்கும் இவ்வேளையில் பல வருட கால அரசியல் அனுபவம் மிக்க ஒரு
கட்சியின் தலைமை இவ்வாரான ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டிருப்பது வேதனை
தரக்கூடிய ஒன்றே.
இந்த நகர சபை ஒதுக்கீட்டை தேர்தல் காலங்களில் இல்லாமல்
சாதாரண காலங்களில் அமைச்சர் பெற்று கொடுத்திருந்தால் இப்பிரதேச மக்கள்
தலைகளிலும்,தோள்களிலும் அமைச்சரையும்,அமைச்சரின் கட்சியையும்
தூக்கிசுமந்திருப்பார்கள் என்பதில் எந்த வித ஐயப்பாடுமில்லை
எனலாம்.சாய்ந்தமருது மக்களுக்கும்,ஏனைய பிரதேச மக்களுக்கும் இந்த
காலப்பகுதியில் நகர சபை இல்லை.தனி மாகாணமாக பிரித்து கொடுத்து இருந்தாலும்
மக்கள் எடுத்த முடிவில் உறுதியாகவும்,அறுதியாகவும் உள்ளனர் என்பது
மறுப்பதுக்கில்லை.
எது எப்படியாக இருந்தாலும் சாய்ந்தமருது மண்ணுக்கு
தனியான உள்ளுராட்சி சபை ஒன்று அவசியம் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
இந்த கோரிக்கை எதிர்வரப்போகும் பொது தேர்தலின் பிரதான அங்கம் வகிப்பது
நிச்சயம் என்கிறார் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கை
பரப்பு செயலாளரும், அம்பாரை மாவட்ட நிஸ்கோ பணிப்பாளர் சபை முன்னாள்
உறுப்பினருமான அல்-ஹாஜ் ஹுதா உமர் அவர்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, January 7, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தமது புதல்வனின் முதலாவது மனைவியையும் பிள்ளையையும் கவனித்துக் கொண்டு அவர்களுடன் 76 வயது ஒய்வு பெற்ற ஆசிரியையான தமது தாயை கொடுமைப்படுத்திய ...
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply