எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு திணறிப்போனது.
திங்கட்கிழமை மாலை கொழும்பு மருதானை டவர் மண்டபம் அருகில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கடுமையான உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன்போது பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்டு அவருக்கு கண் கலங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்று அறிந்து கொண்ட அவர், தனது உரையில் கண்கலங்கி, சற்றுத் தடுமாறினார்.
எதிர்வரும் எட்டாம் திகதி தான் வெற்றி பெற்றவுடன் அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு இலங்கையை தான் உருவாக்குவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது உரையின்போது உறுதியளித்தார்.
இந்தநிலையில் அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, 10 வருட மஹிந்தவின் ஆட்சி முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன்சேகா, அத்துரலியே ரத்தன உட்பட்ட பல தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 6, 2015
இறுதிப் பிரச்சாரம்!! மக்கள் வெள்ளத்தால் திணறிப்போனது கொழும்பு! அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக்கூடிய இலங்கையை உருவாக்குவேன் - மைத்திரிபால
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தமது புதல்வனின் முதலாவது மனைவியையும் பிள்ளையையும் கவனித்துக் கொண்டு அவர்களுடன் 76 வயது ஒய்வு பெற்ற ஆசிரியையான தமது தாயை கொடுமைப்படுத்திய ...
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply