தமது புதல்வனின் முதலாவது மனைவியையும் பிள்ளையையும் கவனித்துக் கொண்டு அவர்களுடன் 76 வயது ஒய்வு பெற்ற ஆசிரியையான தமது தாயை கொடுமைப்படுத்திய மகனுக்கு தாயின் வீட்டுக்குச் செல்வதை நிறுத்தும்படி பாணந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி குச்சிர வெலிவத்த உத்தரவிட்டார்.
பாணந்துறை பிரதேச பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியை பாணந்துறை வலான பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தாயாவர் மகள் திருமணமாகி குருணாகல் பிரதேசத்தில் வசித்து வருகிறார். மகன் முன்னர் வலான பிரதேசத்தில் தாயுடன் வசித்து வந்துள்ளார். முதலாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு பின்னர்
இவர் தனது தாயின் தலையைப் பிடித்து சுவரில் மோதுவது வீட்டை விட்டு துரத்தியடிப்பது போன்றவை தொடர்பாக அந்தத் தாய் பாணந்துறை பொலிஸாருக்கு முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் பத்தாவது முறைப்பாட்டை மாத்திரமே நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
முறைப்பாட்டாளருக்கு சொந்தமான வீடு மற்றும் சொத்துக்களை சட்டப்படி தமது ஒரே மகனுக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரான மகன் மனைவியை பிரித்து மறுமணம் செய்து கொண்டுள்ளார். முதலாவது மனைவிக்கு சந்தேக நபர் ஜீவனாம்சம் வழங்கி வருகிறார்.
அவர் பி்ள்ளைகளுடன் சந்தேக நபரின் தாயுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
தாய் சந்தேக நபரான மகனுக்கு எழுதி வைத்த உறுதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் ஆத்திரமுற்ற மகன் தாயை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் புதல்வன் தாய் வீட்டுக்குச் செல்வதை தடை செய்யும்படி முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்தே நீதிவான் இத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply