blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 9, 2014

குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’ பெயர் வைக்க தடை


ஜெர்மனி நாட்டில் ‘விக்கிலீக்ஸ்’ என்று பெயர் வைக்க அந்நாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, விக்கிலீக்ஸ் இணையதளம். அந்த வகையில், அதன் மீது குழந்தையின் தந்தை ஹஜார் ஹமாலாவுக்கு நல்ல அபிப்பிராயம். இவர் ஈராக் பத்திரிகையாளர் ஆவார்.

இந்நிலையில், அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ‘விக்கிலீக்ஸ்’ என்று பெயர் சூட்டினர். ஆனால், அதை பதிவு செய்ய சென்றபோது, விக்கிலீக்ஸ் என்ற பெயர் வைத்தால், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறி, அம்முயற்சிக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►