ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தல் வாக்களிப்பின் பொருட்டு இன்று முற்பகல் முதல் சகல வாக்கு பெட்டிகளும் விசேட காவல்துறை பாதுகாப்புடன் மாவட்ட செயலாளர் காரியாலங்களில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.
தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு பெட்டிகளும் ஆவணங்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
22 தேர்தல் மாவட்டங்களில் 12 ஆயிரத்து 313 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளன.
இந்த நடவடிக்கைகளின் பொருட்டு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அதிகாரிகள் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றும் நாளையும் எந்த விதமான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு பேரணிகள் மற்றும் பாதையாத்திரைகளை ஒழுங்கு செய்யாதிருக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர், சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளையும் நாளைமறுதினமும் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply