இந்த தேர்தலில் வாக்களிக்கச் செல்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகியுள்ளது.எனவே ஒவ்வொருவரும் தவறாது வாக்களிக்கச் செல்ல வேண்டும் என கோரியுள்ளார் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி.
வீட்டில் நோய்வாய்ப்பட்டவர்கள் இருந்தால் கூட அவர்களை அழைத்துச் செல்ல முடியுமாக இருந்தால் அதற்கான வழிமுறைகளைக் கையாண்டு அழைத்துச் செல்வதுடன் இந்த வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிப்பது கடமை எனவும் அத்துடன் முடிந்த வரை நோன்பு நோற்று துஆக் கேட்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முடிவுற்றிருந்த நிலையில், எதிரணியின் பங்காளி எனும் நிலையில் தேர்தல் வெற்றி குறித்து அவரிடம் வினவிய போது 53 – 57 வீத வாக்குகளை மைத்ரிபால பெறுவது உறுதியென தெரிவித்ததன் தொடர்ச்சியிலேயே மேற்கண்ட கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.
இதேவேளை 99 வீதமான முஸ்லிம்கள் ஒற்றுமையாக ஒரே வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதும் இதுவே முதற்தடவையெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply