திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் என அழைக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றுவருகின்றது. காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதும் சற்று மந்த கதியிலேயே வாக்களிப்பு இடம்பெற்றபோதிலும், படிப்படியாக சுறுசுறுப்பான வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை இந்த மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களை விடவும் முஸ்லிம் பிரதேசங்களில் மிக ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாஇ இருந்தது.
பவ்ரல் மற்றும் தேல்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலைய கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நிழைலயங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply