கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தை எதிர்க்கட்சியினர் சற்று முன்னர் சுற்றி வளைத்துள்ளனர்.எதிர்க்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சுற்றி வளைத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவைத்தலைவர் கரு ஜயசூரிய, துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற அதுரலிய ரதன தேரர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இவ்வாறு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் போலி வாக்குச் சீட்டுக்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சில இடங்கள் தேடப்பட்டதாகவும் சந்தேகத்திற்கு இடமான எதுவும் மீட்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply