
பெரும் பாக்கியத்துடனான அமைச்சைப் பெற்றுள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம்.
கடந்த சர்வாதிகார ஆட்சியின் கீழ் நீதியமைச்சில் சுயாதீனமாக இயங்க முடியா நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த அவர் பாரிய விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டு வந்திருந்தார்.
எனினும் தற்போது புதிய ஜனாதிபதியின் திறந்த ஜனநாயகப் போக்கின் கீழ் இவ்வாறு ஒரு அமைச்சு அதுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கிடைக்கப் பெற்றிருப்பது பெரும் பாக்கியம் என கொழும்பு அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை தம்புள்ள பிரதேச மக்களும் இச்செய்தி கேட்டு மனமகிழ்ச்சியடைந்து எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply