எப்போதுமே தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பேசிக் கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தினர் இன்று தோல்வி தொடர்பிலும் பேச ஆரம்பித்துள்ளனர்
என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் கந்தளாயில் நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதியும், அரசாங்கமும் தோல்வியடைந்தால் என்ன செய்யலாம் என தற்போது திட்டமிடுகின்றனர். இதுவரை காலமும் தோல்வி குறித்துக் கூறவேயில்லை. எப்போதும் வெற்றி பெறுவதாகவே கூறினார்கள்.
ஆனால், தற்போது தோல்வியடைந்தால் இரண்டு வருடம் இருக்கப்போவதாகக் கூறுகின்றனர். நாங்கள் உறுதியளிக்கின்றோம். எவ்விதமான அச்சமும் இன்றி ராஜபக்ஷவிற்கு எதிராக வாக்களியுங்கள்.
தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் 24 மணித்தியாலங்களுக்கு மேல் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்தால் நாட்டு மக்களுடன் ஜனநாயக சக்தியாக ஒன்றிணைந்து அவரை விரட்டியடிப்போம்” என்றுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, December 20, 2014
வெற்றி பெறுவோம் என பேசிக்கொண்டிருந்த ராஜபக்ஷக்கள் தோல்வி குறித்து பேசுகின்றர்: அநுரகுமார திஸ்ஸாநாயக்க
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply