blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, December 20, 2014

'ஆசியாவின் அதிசயமாக நம் நாட்டை கட்டியெழுப்புவோம், இனியும் உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்வோம்' - காத்தான்குடியில் ஜனாதிபதி

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று (20)  காத்தான்குடியில் இடம்பெற்றது.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம் மக்கள் மத்தியில் சிங்களத்திலும், தமிழிலும் 18 நிமிடம் விஷேட உரை  ஆற்றினார்.

அங்கு அவர் குறிப்பிடுகையில்;

வருகை தந்திருந்த முஸ்லிம்களுக்கு ஸலாம் கூறி தனது உரையினை ஆரம்பித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்ற கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தினை நியாபகப்படுத்திய அவர், இது போன்ற பயங்கரவாதம் மீண்டும் ஏற்பட இடம் தர முடியாது அதற்கு விட மாட்டோம் என தெரிவித்தார்.

'இனியும் இனியும் உங்களுடைய பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்வோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இப்பொழுது நிலவும் அபிவிருத்திகள் என்றென்றும் தொடர வேண்டும் எனவே நாம் அனைவரும் கைகோர்த்து முன்னேக்கி செல்லவேன்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த வரவு செலவுதிட்டத்தின் மூலமாக 150000 பேர்களை தெரிவு செய்துள்ளதாகவும் அவர்களுக்காக‌ தேவையான பணத்தை ஒதுக்கியுள்ளதாகவும், உயர்கல்வி பரீட்சை அல்லது எஸ் எல் சி பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கு அரச சேவையில் நியமனம் வழங்குவதற்காவும் பணத்தினை ஒதுக்கிவைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் தொழிநுட்ப அறிவினை மேலும் மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளின் வசதிகளுக்காக மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களை ஏற்படுத்தி கல்வியை  மேம்படுத்தி வளப்படுத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். 
நாங்கள் இந்த நாட்டில் அரச சேவைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். கடந்த காலத்தில் இருந்த அரசுகள் அரச சேவைகளில் இருந்த 6 தொடக்கம் 7 லட்சமானவர்களை 3 இலட்சமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயன்றனர். அதனை நாங்கள் 15 லட்சமாக அதிகரித்துள்ளோம். 

குறுகிய அரசியல் நோக்கம் உங்களுக்கு வேண்டாம். இந்தக் குறுகிய காலத்தில் நாம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி இலங்கையின் வரலாற்றில் வேறு எப்போதும் இடம்பெற்றிருக்கவில்லை, நீங்களே அதற்கு சாட்சி. 
 
எமது ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கா னோருக்கு நாம் அரசாங்க தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம். 
 
விவசாயத்துறையிலும் கைத்தொழில் துறையிலும் மீன்பிடித்துறையிலும் பல சலுகைகளையும் மானியங்களையும் நாம் வழங்கியுள்ளோம். கல்வி, உயர்கல்வி சுகாதாரம் வீதி என அபிவிருத்திகள் இந்தக் குறுகிய காலத்தில் இடம்பெற்றுள்ளன.
 
மட்டக்களப்பில் விமான நிலைய மொன்றை நிர்மாணிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். சமாதானமும் அபிவிருத்தியுமே இந்த நாட்டின் முக்கிய தேவையாகும்.

'எதிர்கட்சியினர் பலரோடு பல ஒப்பந்தங்களை செய்துள்ளனர் அப்படியிருக்கையில் எவ்வாறு அவர்களை நம்புவது??!!' என்று கேள்வி எளுப்பினார்.

'எதிர்கட்சியினர் எது சொன்னாலும் நாம் உங்களை மறக்க மாட்டோம் எனவும் பாதுகாப்போம் எனவும் தெரிவித்தார், பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும் மேலும் தெரிவித்தார்.

ஆசியாவின் அதிசயமாக நம் நாட்டை கட்டியெழுப்புவோம் எனவும் உணர்சிபொங்க தெரிவித்தார்.

காத்தன்குடி செய்திக்காக,
எம்.ஆர்.ஏ. நிஷா






No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►