blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, December 19, 2014

WiFi என்றால் என்ன?!

“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாம ல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட் வொர்க் இணைப்பு(wireless நெட் வொர்க்). 

இந்த இணைப்பு wired நெட் வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப் யூட்டர்-ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாக வும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது

WiFi Hotspots என்றால் என்ன?
WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக் கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்க ள் கணினியில் செயல்படுத்தி விட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்று ம் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi  ஹாட் ஸ்பாட்டாக(access point) இருக்கு ம். 

வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?

1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு (Operating system)
2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.

3. ஒரு கம்பியில்லா திசைவி (wire less router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட (inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.

4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.
5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல் கள் (router setup instructions) ஒரு நகல்.

வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?

1. இணையத்துடன் இணைக்கவும்
2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.
3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கவும்.
5. இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

கம்பியில்லா கணினி வலயமைப்பைக் குறிக்கும் வைபை தொடர்பாடலிலும் பல விதிமுறைகள் உள்ளன. இவற்றுள் 802.11 என்பது Institute of Electrical and Electronics Engineers (IEEE) எனும் நிறுவனத்தினரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதி முறையாகும். இந்த விதிமுறைகள் 802.11a, 802.11b, 802.11g, 802.11n என பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி வந்துள்ள்ன. 802.11n (வயலெஸ் என்) என்பது 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வரையறுக்கப்பட்டதாகும்.

இந்த வயலெஸ் என் - ஆனது 2.4GHz அல்லது 5 GHz அலை வரிசையில் டேட்டாவைக் கடத்துகிறது. இது இதற்கு முந்திய விதிமுறைகளை விட அதிக வேகமாகவும். அதிக தூரம்செல்லத்தக்கதாகவும். உருவாக்கப்பட்டுள்ளது.

கம்பியில்லா வலையமைப்பை இப்போது பலரும் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். வீடுகளில் மட்டுமன்றி நூல் நிலையங்கள், .பல்கலைக் கழகங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் இந்த கம்பியில்லாத் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.

வைபை தொழில் நுட்பத்தின் மூலம் மூலம் இலகுவாக இணையத்தில் இணையும் வசதி கிடைத்தாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனின் அதன் அருகாமையில் உள்ள எவரும் இந்த வலயமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்பதை ஒரு பாதகமான விடயமாகக் கருதலாம்.

வைபை தொழில் நுட்பமானது தொடர்பாடலில் பெரிய அளவிலான பங்கை வகிக்க ஆரம்பித்துள்ளதுடன் உலகெங்கும் உள்ளக கணினி வலையமைப்பு களில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►