எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இத் தகவலினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி ரெலிகோம் வீதியில் நிறுவப்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விஜயம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவிக்கையில்:
19-12-2014 வெள்ளிக்கிழமை காத்தான்குடி விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பில் 14-12-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு ஜனாதிபதி விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.
இவ் விஜயத்தில், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , நகர சபை உறுப்பினர் அலி சப்ரி, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ. நாஸர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, December 15, 2014
எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடி விஜயம்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply