எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்களாகிய தமிழர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களில் வடக்கு கிழக்கு மக்களை ஓரளவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக ளாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஆதரவு யாருக்கு என்பதை அறிவதில் போட்டியிடும் பிரதான கட்சிகளுடன் இணைந்து பொது மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உண்மையில் இவ்விரு கட்சிகளும் தாம் சார்ந்த மக்களது நலனில் அக்கறை கொண்டதாக இருப்பின் அவை ஆளுங்கூட்டணியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே தமது ஆதரவை வழங்க வேண்டும் என்பது பலரதும் கருத்தாக உள்ளது.
அதிலும் முஸ்லிம் காங்கி ரஸைப் பொறுத்தவரையில் அக்கட்சி ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களதும் கருத்தாக உள்ளது.
காரணம் அவர்கள் இன்றுவரை ஆளுங்கட்சியில் அமைச்சுப் பொறுப் புக்களை வகித்து வருவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையிலான இந்த அரசாங்கத்தின் மூலமாகப் பல உதவிகளையும் பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவிற்கே தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர். அத்துடன் அக்கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் பலரும் ஜனாதிபதிக்கே தமது ஆதரவு எனவும் தெரிவித்துள்ளனர்.
அதனால் அதன் தலைமையினால் மக் களது இக்கோரிக்கையைத் தட்டிக்கழிக்க முடியாத நிலையே காணப்ப டுகின்றது. எனினும் கட்சியில் காணப்படும் சிறு சிறு உட்பூசல்கள் காரணமாக அவர்களால் தமது முடிவை உடனடியாக வெளியிடுவதில் ஒரு சிக்கல் நிலை காணப்படுவதாக அறிய முடிகிறது. அது விரைவில் தீர்க்கப்பட்டுவிடும்.
அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை அறிவிப்பதில் காலந்தாழ்த்தி வருவதானது காரணம் இதுவரை காலமும் ஆட்சி மாற்றம் வேண்டும், பொது எதிரணி வேட்பாளர் வேண்டும் எனக் கூறி வந்தவர்கள் ஆதரவளிப்பது விடயத்தில் திடீரென மெளனித்திருப்பது அவர்களிடையே ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத் தியுள்ளது என்பதைப் புலனாக்கியுள்ளது.
அவர்கள் பொது வேட்பாளரை ஆதரிப்பவர்களாக இருந்திருந்தால் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்ட அடுத்த நிமிடமே தமது ஆதரவு பொது வேட் பாளருக்கு என அறிவித்திருப்பர்.
அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னரைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்களின் ஆதரவு கிடையாது. குறிப்பாக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்மக்கள் தமிழ்க் கூட்டமைப்பு மீது காட்டிய ஆர்வம் இப்போது இல்லை. காரணம் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக அம்மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் தமிழ்க் கூட்டமைப்பு எடுக்கவில்லை.
மாறாக அதன் தலைவர்கள் தமது குடும்பங்களையும், உறவினர்களையுமே பலப்படுத்தியுள்ளனர். உண்மையில் தமிழ் மக்களின் கணிப்பு இதுவாகவே உள்ளது.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் வடக்கில் முன்னொருபோதும் இல்லாதவாறு பலமாகியுள்ளன. இதனால் தமிழ்க் கூட்டமைப்பு தமது எதிர்காலத்தைத் தக்க வைப்பதற்கானதொரு போராட்டத்தில் அங்கு ஈடுபட வேண்டியுள்ளது.
வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் மூலமாக மக்களது பல தேவைகளை நிறைவேற்றி வருகிறார். அதேபோன்று அங்கு சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களான கலாநிதி.
வேல்முருகு தங்கராசா, அங்கஜன் இராமநாதன், திருமதி. கீதாஞ்சலி நகுலேஸ்வரன் ஆகியோரும் அங்கு முன்னரைவிடவும் காலூன்றி உள்ளனர். மக்கள் இவர்கள் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.
அதேபோன்று கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எதுவுமே செய்யாது வெறுமனே அறிக்கைகளையே விட்டுவரும் நிலையே காணப்படுகிறது.
அங்கும் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக இருக்கும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கட்சியின் அமைப்பாளர்களான அருண் தம்பிமுத்து, இராசமாணிக்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், இனியபாரதி எனப் பலர் அரசாங்கத்தின் சேவைகளை அம்மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அதுபோலவே கிழக்கில் வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேவை செய்து வருவது போலவே முதலமைச்சராக இருக்கும் நஜீப் ஏ.மஜீத், அலி ஸாகிர் மெளலானா, சுலைமாலெவ்வை உட்பட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் சேவையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது எந்தவொரு கட்சியுமோ நாம்தான் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி என இனியும் மார்தட்ட முடியாது.
இப்போது தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும ளவிலான மக்கள் ஜனாதிபதியுடன் நேரடியாகவே தொடர்புகளை வைத்துள் ளனர். இப்போது அம்மக்களுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. அந்த ளவிற்கு ஜனாதிபதி மக்களுடனான இணைப்பை இலகுபடுத்தியுள்ளார்.
அதனால் வீர அறிக்கைகள் விடும் கட்சிகள் இனியும் மக்களைத் தம்பக்கம் வளைத்துப் போடலாம் எனக் கனவு காண்பது தவறு. அந்தக் காலம் எப்போதோ மலையேறிவிட்டது.
இதனைப் புரிந்து கொண்டு செயற்பட்டாலேயே தமக்கு எதிர்காலம் என்பதை தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதியுடனேயே உள்ளனர்.
அதனால் ஜனாதிபதியின் வெற்றி என்பது இலகுவானதாக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தமது தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் அதேவேளையில் நிச்சயம் வெற்றி பெறும் வேட்பாளரான ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டு தமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே புத்திசாலித்தனம்.
இதனைவிடுத்து முன்னொரு காலம் போன்று நாமே தீர்மானிக்கும் சக்தி, எமது கால்களில் விழுந்தாலே ஆதரவு, எமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்பதாக வீர வசன அறிக்கைகளை விடுத்தால் நிச்சயம் சிறு கட்சிகள் மண்ணையே கவ்வ நேரிடும்.
அதனால் தாம் சார்ந்த மக்களதும், தங்களது கட்சியின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதே சிறந்த முடிவாக அமையும். இக்கருத் தினையே தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் கொண்டிருக்கின்றன. அதனை அவர்கள் இன்னுமொரு தடவை உறுதி செய்து கொள்வது நல்லது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, December 14, 2014
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்களாகிய தமிழர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு??!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக க...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply